பௌத்த மரபில் சைத்திய மண்டபங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
பௌத்த மரபில் சைத்திய மண்டபங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆதிகால மனிதன் செம்மைத்தன்மையினை அறியும் பொருட்டு தன் உழைப்பினால் கலையினைப்பிறப்பித்தான். இவ்வாறு ஆதிமனிதனால் படைக்கபபட்ட கலையானது இன்று பல உந்தல் காரணிகளினால் வரையறைக்கு உட்பட்டவகையில் நோக்கபபடுகின்றது. அந்தவகையில் ஆயகலைகள் 64களில் சிற்பம் ஒவியம் , இசை,நடணம் ,நாடகம் ,கட்டடம் ,இலக்கியம் ,சினிமா என்பன முக்கிய ம் பெறுகின்றன. அந்தவகையில் யாவற்றிலும் சிறப்புடைய கலையாக கட்டிடக்கலை காணப்படுகின்றது .
“மனிதனின் வசிப்புத்தேவையினையும் பொது தேவையினையும் பூர்த்திசெய்யும்பொருட்டு ஒருவெளியில் அதன் காலநிலை, இயற்க்கை சூழலுக்கேற்ப எழுப்பிய ஒரு கட்டுமானமே கட்டடம் எனப்பட்டது . கட்டடம் ஒன்றின் கலா பூர்வமான வெளிப்பாடே கட்டிடக்கலையினை தோற்றுவித்தது .
கட்டிடக்கலை என்பது ஒரு சூழலை தோற்றுவிக்கும் ஊக்கி அதாவது ஒரு வெளியை மனித நிலைப்படுத்தும் தூண்டியாகவும் காணப்படுகின்றது .
ஒருவகையில் கட்டிடக்கலை என்பது உயிர்வாழ்க்கையுடைய ஆக்கச்சிறப்புடைய ஒரு உயிராகும். அது காலம் காலமாய் வரும் பினைப்பு என rank lioyewringht என்வரும் “all architecture all great chitecture is thae desingn of space that phtains cuddles ,exalts or stimulates “ என phlip jalnsan என்பவரும் “கட்டடம் என்பது வெளிக்குள் இடம்பெயர்க்கப்பட்ட வலுவின் வெளிப்பாடு “ என MIES BANDER ROHE என்பவரும் கட்டிடக்கலைபற்றி கருத்துத்தெரிவித்துள்ளனர்.
கட்டடம் என்பது இயற்கையைப் போலச்செய்தலாக இருக்க வேண்டும் என்று பொதுவான ஆய்வுகள் கூறுகின்றன. கட்டிடக்கலை ஒரு தாய்க்கலை எனவும் இக்கலை இன்றி வேறுகலை இல்லை எனவும் போற்றப்படுகின்றது .
அந்தவகயில் வரலாற்று சக்கரம் சுழல்கையில் நாகரீகம் விட்டுச்சென்ற கட்டிடக்கலைகளில் இந்திய கட்டிடக்கலைக்கென ஒரு தனித்துவம் உண்டு. சிந்துவெளி காலம் தொடக்கம் இந்திய கட்டிடக்கலையின் வழர்ச்சிஎன்பது தொடர்கின்றது . பல்வேறு உண்னதமான கட்டிட அம்சங்களை தன்னகத்தே கொண்டதாக இந்திய கட்டிடக்கலை வரலாறு திகழ்கின்றது. அந்தவகையில் வீடுகள், கோவில்கள், விகாரைகள், நினைவுச்சின்னங்கள், சைத்தியங்கள், , குடைவரைகள் என சமயம் சார்ந்த, சமயம் சாராத பல்வேறு வகைப்பட்ட கட்டட வடிவங்கள் தோன்றி வளர்ச்சியடைந்து வந்துள்ளன. கட்டிடங்கள் பல்வேறு நுட்பமுறைகளில் அமைக்கப்பட்டன அந்தவகையில் மலைகளை குடைந்து அமைக்கழ்படும் கட்டுமாணம் குடைவரை அல்லது குடைபோகம் எனப்படது.
தென்னிந்தியாவில் இக்கலை மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வேரூன்றியது. பெளத்த சமயத்தினரால் போற்றப்பட்ட இக்கலை நாளடைவில் இந்து சமயத்தினராலும் வளர்க்கப்பட்டது.
இந்தியாவில் 1200க்கும் மேற்பட்ட குடைவரைகள் அமைக்கப்பட்டன என கூறப்படுகின்றது. இதில் 900 பெளத்த சமயத் தொடர்புடையவை. எஞ்சிய 300 சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவைஎன்ற கருத்துக்களும் காணப்படுகெனன்றன. அந்தவகையில் பௌத்த குடவரைகளே அதிகமாக தோற்றம்பெற்றுள்ளன. அந்தவகையில் அவற்றின் தோற்றம் வளர்ச்சிகட்டங்கள் என்பன பற்றி அறிந்துகொள்வது முக்கியமானதாகும்
பௌத்த மரபில் சைத்திய மண்டபங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்வோமாயின்..
பௌத்த மரபு கட்டுமாணங்களில் சைத்தியங்கள் முக்கியம் பெறுகின்றன சைத்யியம் என்பது துறவிகள் தங்குவதற்க்கான இடமாகவும் துறவிகளை சந்திப்பதற்க்கான இடமாகவும் காணப்படுகின்றன.
ஆரம்பத்தில் பௌத்த மரபில் பிக்குகள் 6 மாதங்களுக்கு துறவு வாழ்க்கையில் ஈடுபடவேன்டும் என்ற விதி காணப்பட்டது அந்த விதியின்படி துறவுவாழ்க்கையில் ஈடுபடுவதற்க்கு தனியான ஒரு இடம் வேண்டும் இதற்காக காடு சார்ந்த மலை சாரந்த இடங்களை தெரிவு செய்தார்கள் இவ்வாறு இருக்கையில் வெய்யில் மழைபோண்ற இயற்கை காரணிகளில் இருந்து தங்களை பாதுகாப்பதற்க்காக மலைகளை குடைந்து அமைக்கப்பட்டவையே சைத்தியங்கள் அல்து குடைபோகங்கள் எனப்பட்டன .
ஆரம்பத்தில் குகளை குடையும் வழக்கம் காணப்படவில்லை இயற்கையாகவே அமைந்த குகைகளிலேயே இருந்துவந்தார்கள் அதன் பிற்பட்டகாலங்களிலேயை செயற்க்கையாக மலைகளை குடையும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்நதே சைத்தியங்களின் தோற்றம் என்பது ஆரம்பமாகியது. செயற்க்கையாக குகைகளை குடைந்து சைத்தியங்களை அமைத்து தமது தங்குமிடங்களை பூர்த்திசெய்துகொண்ட பௌத்த பிக்குகள் பிற்க்காலத்தில் அதனை பௌத்த வழிபாட்டிற்க்குரிய ஒரு இடமாகவும் மாற்றியமைத்தனர் அதனை தொடர்ந்து சைத்தியங்களினது வழச்சி என்பது ஆரம்பமாகியது .
பௌத்த துறவிகள் தங்கும் இடமாகவும் வழிபாட்டு இடமாகவும் பார்க்கப்பட்டுவந்த சைத்தியங்கள் புத்தருடைய போஐனைகளை கற்றுக்கொள்கின்ற இடமாகவும் தியானங்களை செய்வதற்க்காண ஒரு இடமாகவும் ஒய்வெடுப்பதற்காண ஒரு இடமாகவும் காலப்போக்கில் மாற்றம் கண்டது.
ஆரம்பத்தில் தேவை கருதிய பயன்பாட்டு இடமாகதோற்றம்கண்ட சைத்தியங்கள் பிற்பட்ட காலங்களில்பல்வேறு அமசங்களுடன்சேர்த்து கலை நுட்பங்களும் புகுத்தப்பட்டு கலையாக்கம்கொண்ட இடமாக வளர்ச்சிகன்டன.
சைத்தியத்தில் பொதுவாக மூண்று பகுதிகள் காணப்படும்
1- வாசல்பகுதி
2- நீள் சதுர மண்டப்ப்பகுதி
3- மூலப்பகுதி
மூலப்பகுதி துறவிகளின் வழிபாட்டு இடமாக காணப்பட்டது. நீள் மண்டபப்பகுதி பொதுமக்கள் ஒண்றுகூடும் இடமாக காமப்படுகின்றது ஆரம்பத்தில் சாதாணமாக அமைககப்பட்ட சைதத்தியங்கள் அதன் வளர்ச்சிக்கட்டங்களில் பல்வேறு கலை நுடபங்களையும் செதுக்கல்வேலைப்பாடுகளையும் கலையம்சம் பொருந்திய தூண் அமைப்புக்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ச்அசியடைந்தன.
இந்தியக்கட்டடக்கலைவனலாற்றில் சைத்தியம் அமைக்கும் முறை என்பது முதல் முதலாக மௌரியர்காலத்திலேயே கொண்டுவரப்பட்டது இதன் அத்திவாரமாக அசோகன் காணப்படுகின்றான் மௌரியர்காலத்தில் மன்னன்தான் முக்கியமாணவனாக கருதப்பட்டான். ஆகையால் அசோகன் குடைபோகங்களை அமைக்கும்படி கட்டளை இடுகின்றான் அவனின் கட்டளையின் அடிப்படையிலேயே ஏழு குடைவரைகள் அசோகன் காலத்தில் அமைக்கப்பட்டதுஎன கூறப்படுகின்றது. .இந்தியாவின் புராதனகாலத்து தொண்மையான குடைபோகங்களாக அசோகன் காலத்து குடைபோகங்களை கருதப்படுகின்றன மௌரியர்காலத்தில் குடைவரைகளை அமைக்கும் முறைமையை தொடர்ந்தே பல்லவர்காலத்திலும் குடைவரைகள் அமைக்கும் முறைமை கொண்டுவரப்பட்டது .
காஜா என்ற இடத்தில் அசோகனால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற 7 குடைவரைகளில் 3குடைவரைகள் பராவத் மலையில் காணப்படுகின்றது இன்னும் 3 நாகர்ச்சுண மலையில் காணப்படுகின்றது இன்னும் ஒன்று சிதமல்கி என்னும் இடத்தில் காணப்படுகின்றது குடைவரைகளை அமைப்பதற்கு அக்கால செல்வந்தர்கள்ளும் போசகர்களும் உதவிபுரிந்தார்கள் எனவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் பௌத்த .சைத்தியத்தின் ஆரப்பகட்ட வளர்ச்சியினை லோமறசி குடைவரையிலும் அதனைத்தொடர்நது அடுத்தகட்ட வளர்ச்சியினை கோபி,கார்ளி ,பாஜா ,அஐந்தா எல்லோராபோண்ற குடைவரைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் குடைவரைகளிலே மூத்த குடைவரை எனப்டும் லோமறசி குடைவரைபற்றி அறிந்துகொள்வதன்மூலம் ஆரம்பகாலகட்ட குடைவரை அதாவது சைத்தியங்களின் அமைப்பினையும் கலைத்திறனையும் அறிவதோடு அடுத்தகட்ட சைத்தியங்களின் வளர்ச்சிப்போக்குபற்றி தெளிவாக விளங்கிக்கொள்வதற்க்கும் துனையாக அமையும் .அந்தவகையில் லோமறசி சைத்தியம்பற்றி நோக்குவோமாயின்
லோமறசி சைத்தியம்
குடைபோகங்களில் முக்கியமானன குடைபோகமாக லோமறசி குடைபோகம் குறிப்பிடப்படுகின்றது இது இந்தியாவின் மீகார் மாணிலத்தியில் அமையப்பெற்றுள்ளதுது. இது கி.மு 3ம் நூற்றாண்டுக்குரியது. அந்தவகையில்.
லோமறிசி குகையின் வாயில் பகுதியில் யானையின் செதுக்கல்கள் காணப்படுகின்றது செதுக்கலின் மேற்பகுயியில் பின்னல் அலஙகாரம் போன்ற செதுக்கல் கொண்டுவரப்பட்டுள்ளது. குடைவரைகள் மலைகளை குடைந்து உருவாக்கப்டுகின்றமையினால் கல்லிலேயே கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன இது மரம் என்ற ஊடக்த்தை கடந்து கல் என்ற ஊடகத்துக்கு மாறும் தன்மையினை காட்டுகின்றது இவ்வறு மாறினாலும் மர செதுக்கலின் நுட்பங்களை கல்லிலும் காணலாம் கல்லில் செதுக்கப்பட்ட செதுக்கல்களும் மர செதுக்கலைப்போண்றே காணப்படுகின்றன.
உட்புற சுவர்களின் புறச்சுவர்களில் மரத்தினால் செய்ததைப்போண்று உருவாக்ப்பட்ட தீராந்தி அமைள்பானது காணப்படுகினன்றது இது ஒளி உள்ளே போவத்ற்கான வளியாக காணப்படுகின்றது சைத்தியத்தின் உட்பகுதி இருளும் ஒளியும் கலந்த ஒரு இடமாகவே காணப்படும் . சைத்தியத்தின் உட்பகுதிகளிற்கு ஒளியானது நுளைவாயில் பகுயியின் ஊடாகவும் யானைச்சிற்பக்களிற்குமேலே உள்ள பின்னல் போண்ற அமைப்புக்கள் ஊடகவும் வருகின்றது நுளைவாயில் பகுதியில் இரண்டு செங்குத்தான தூண்கள் கொண்டுவரப்படுகின்றது .
யானையின் செதுக்கல்கள் ஒன்றுக்கொண்று தொடர்ச்சியான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது. யானையானது பௌத்தர்களின் புனித சின்னங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது இதனாலேயே இங்கு யானை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன என கருதப்படுகின்றது. வேறு சில ஆய்வாளர்கள் தூபியை யானைகள் வழிபடச்செல்கின்றது என்பதன் அடையாளமாக காணப்படுகின்றது என கருதுகின்றனர் .
யானைகள் அரைவட்டவடிவில் செதுக்கப்ளட்டுள்ளது அரை வட்டத்தின் மத்தியில் தூபியின் அமைப்பு காணப்படுகின்றது மத்தியில் காணப்படும் தூபியை நோக்கி செல்வதாகவே இரண்டு பக்கங்களிலும் யானைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் யானைகளின் வரிசைகளை பிரிப்பதாக இந்த தூபிபோண்ற அமைப்பு காணப்படுகின்றது.
இங்கு செதுக்கலின் தன்மை என்பது மேலிருந்து கீழ்நோக்கியதாகவே காணப்படுகின்றது சைத்தியம் நிலத்திற்கு சமாந்தரமான அமைப்பாக அமைக்கப்பட்டுள்ளது தொடர்சியாக நாகர்ச்சுனமலையில் அசோகன் காலத்தில் அமைக்கப்படட
கோபி குடைவரையும் முக்கியம்பெறுகியம் பெறுகின்றதது இக் குடைவரை அமைப்பானது 44 அடி நீளம், 10 அடி உயரம், 18 அடி அகலம் உடையது .கோபி குடைவரையில் மணி வடிவம் போன்ற ஒற்றைக் கற்றூண் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கர்ணாசௌபர் சைத்தியமானது வளவளப்பான உட்புறம், மற்றும் ஒற்றை அறை அமைப்பு கொண்டுள்ளது. மற்றூம் விஸ்வயோப்ரி சைத்தியமானது 2 செவ்வக வடிவ அறைகளை கொண்டமைந்ததாக காணப்படுகிறது. மேற்கூறிய சைத்தியங்களின்மூலமும் ஆரம்பகட்ட பௌத்த சைத்தியங்களின் வளர்ச்சியினை காணமுபியும். அடுத்ததாக.கார்ளி சைத்தியத்தை நோக்குமபோது லோமரசி சைத்தியத்தின் அடுத்தகட்டவளர்ச்சியினை இங்கு காணமுடிடின்றது.
கார்ளி குடைவரை
லோமரசி சைத்தியத்தின் அடுத்தகட்டவளர்ச்சியாக கார்ளி சைத்தியங்களை காணலாம். அந்தவகையில் லோமறிசி குகையில் இரண்டு தூண் அமைப்பே கொண்டுவரப்படடுளளது என பார்த்தோம் ஆணால் இங்கு அதிகபடியான தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தூண்களின் வருகைஎன்பது இங்கு முக்கியம்பெறுகின்றது இது சைத்தியத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியையே காட்டிநிற்க்கின்றது..
குகைகளை குடைந்துதான் தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளது தூண்களின் போதிகையில் கவிள்க்கப்பட்ட தாமரைவடிவம் கொண்டுவரப்பட்டுள்ளது லோமரசி குகையின் வாயிலில் மட்டுமே தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன ஆனால் இங்கு நீள்சதுர மண்படபங்களிலும் அதிகளவாண தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன ஒருவகையில் இது சைத்தியங்களின் வளன்ச்சியினையும் அடுத்த கட்ட நகர்வையும் காட்டுகின்றது .
தூண்களின் வருகையினால் உள்வெளி என்பது நெகிள்ச்சித்தன்மை கொண்டதாக வும் அழகியல் ரீதியான ஒரு கட்டிட அமைப்பாக மாற்றம்பெறுகின்றது
தூண்களில்அடித்தளம் தண்டுப்பகுதி போதிகை என்பன முக்கிய்ம் பெறுகின்றது. தூண்களின் போதிகைகளில் விலங்குருவங்களும் குள்ள உருவங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு அதிகமாக யானை உருவங்களே போதிகைகளில் கொண்டுவரப்பட்டுள்ளது .அத்தோடு சிங்கம் குள்ள உருவங்கள் என்பனவும் செதுக்கப்பட்டுள்ளது. .
சதுர வடிவமாண அடித்தளம் கொண்ட தூண்கள் தண்டுப்பகுதிகள் மரத்தை சீவினால்போல் தோற்றம் அளிக்கின்றவகையில் அமைக்கப்பட்டுள்ளன லோமரரசி குகயில் முண்வாயில் மூலமும் நெற் போண்ற அமைப்புக்களின் மூலமுமே ஒளி உள் வருகின்றது அதோடு இங்கு தூண்களின் அமைப்பின் ஊடாகவும் மேற்பகுதியில் உள்ள சலாகை மூலவும் வெளிச்சம் கொண்டுவரப்படுகின்றது .இங்கு தூபி ஒண்று காணப்டுகின்றது.
சைத்தியத்தின் உட்புறவெளி என்பது சமச்சீர் தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது உள்வெளியில் ஒரேமாதிரியான அலங்காரங்கள் கொண்டுவர்ப்பட்டுள்ளதன் மூலம் உள்வெளி சமச்சீர் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. கார்ளி சைத்தியத்தில் கட்டடத்தை விட சிற்பவெளி என்பது முக்கியமானதாக உள்ளது கூரைஅமைப்பு கவிகை மாட கூரை அமைப்பு போண்றதாக அமைக்கப்பட்டுள்ளது . .
அடுத்ததாக சைத்தியங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியினை பாஜா குடைவரையில் காணலாம்.
பாஜா குடைவரை
அந்தவகையில் பாஜா சைத்தியத்தின் அமைப்பு தொடர்பாக நோக்கினால் இது கிட்டத்தட்ட 22 குகைகளின் தொகுதியாக அமைக்கப்படடுள்ளது . கிமு
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை யாக காணப்படும் இச்சைத்தியம் .கார்ளி குகைகளின் அதே அமைப்பை கொண்டவையாக காணப்படுகின்றன
இக்குகைகளில் ஏராளமான புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவை இந்து தொன்மங்களைச் சார்ந்தவை என கருதப்படுகின்றதுது . உ+ம்
இச் சைத்தியம் 55 அடி நீளம் 26 அடி அகலம்கொண்டதாக. முன் முகப்பு குதிரைலாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதிகம் இந்துக் கோயில் மரபில் இவ் அமைப்பை காணலாம். இக்குடைவரையிலும் ஊடகமானது மரத்திலிருந்து கல்லிக்கு மாறிய அனுபவத்தை நமக்கு காட்டி நிற்க்கின்றது. இங்கு நடுவில் மண்டபமும் இருபுறமும் துணை மண்டபமும் காணப்படுகின்றது. பிரதான மண்டபம், துணை மண்டபத்தை பிரிக்கும் வகையில துணை மண்டபம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு வித்தியாசமான தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன தூண்கள் இவை உரோமத்தூண்களின் பாணியில் அமைக்கப் பட்டுள்ளன என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன உரோமின் பசிலிக்கா தூண் அமைப்பு போல் இது காணப்படுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள தூண் அமப்புக்கள் எண்கோண வடிவுடையது. இங்கு இருபத்தேழு தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் பிரதான மண்டபமும் காணப்படுகிறது. பிரதான மண்டபத்தின் உட்செல்லும் முடிவில் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சைத்தியத்தின் இருபுறத்திலுமுள்ள துணை மண்டபங்களினதும் ஜன்னல்கள் குதிரைலாட வடிவிலான வளைவைக் கொண்டுள்ளன. ஜன்னல்கள் மரச்செதுக்கல் வேலைப்பாடுகள் போல் காணப்படுகின்றன.
பஜாவின் கூரை அமைப்பு பாஜா குகை சிற்பங்கள்
சைத்திய கட்டடங்களின் வளர்ச்சி கட்டத்தில் அடுத்த படியாக
அஜந்தா குடைவரைகள் தொடர்பாக நோக்கலாம்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஔரங்கபாத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் சகோரா பள்ளத்தாக்கின் மேல் அஜந்தா குகைகள் காணப்படுகின்றன. கி.மு இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் ஏழாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியை கொண்டதாக இங்குள்ள குகைகள் காணப்படுகின்றன.
இக் குகையானது சைத்தியம், விகாரை போன்ற இரு பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. சைத்தியமானது வழிபாட்டிற்குரிய இடமாக காணப்படுகின்றது. இங்கு உள்ளே தூபியும் சுற்றிவர தூண்களும் காணப்படுகின்றன விகாரையானது வழிபாட்டிற்குரிய இடமாகும். குப்தர் ,ஆந்திரர் வாகடர் ஆகியோரின் செல்வாக்குடன் அஜந்தா கலையானது வளர்ச்சி அடைந்தது. 29 குகைகளும் வெவ்வேறு போசகர்களின் கீழ் குடைந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.. சைத்தியங்கள் சதுங்களின் மேல்
அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் அஜந்தாவின் 9, 10, 19, 26 போன்ற குகைகள் சைத்தியங்கள் ஆகும். இதில் 10 வது குகை சிறந்த குகையாக கொள்ளப்படுகிறது.
9வது குகை
10வது குகை பாஜா குகை அமைப்பை ஒத்ததாக காணப்படுகின்றது. ஆனால் கூரைஅமைப்பு ,தூபி என்பன தனக்கே உரிய வகையில் அமைந்துள்ளது. அஜந்தாவின் 10 வது குகையில் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளது. சைத்தியங்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குறியீடாகவும், துறவிகளின் வழிபாட்டு இடமாகவும் பார்க்கப்படுகிறது. சைத்தியங்களுக்குள் காணப்படும் தூண்களில் உரோமானிய பண்பை காணலாம்.
தூண்களின் தண்டுப் பகுதியானது எண்கோணம், சதுரம் ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது. சைத்தியங்களின் கூரை அமைப்பு வில் வளைவு கொண்டவையாக காணப்படுகின்றது. அஜந்தா தூண்கள் கீழ்ப் பகுதி அகன்று அதன்மேல் ஒடுங்கிய தண்டு பகுதியாகக் காணப்படுகின்றன. தண்டுப் பகுதியின் தலைப்பகுதியில் போதிகை அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. கூரை பகுதியிலும் தூண்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சதுரமான வரையறைக்குள் ஓவியங்கள் காணப்படுகின்றன.
உத்தரம், முன்விதானம், கூடு, சாலை , முகப்பு போன்ற பகுதிகளும் காணப்படுகின்றது. கூடு அமைப்பானது ஒளியை உள்வாங்குவதற்காக அமைக்கப்பட்ட பகுதி காணப்படுகின்றது. இவ் அமைப்பானது இந்து கட்டடக்கலையில் இருந்து பௌத்த கட்டடங்களில் உள்வாங்கப்படட்டுள்ளதைக்காணலாம். சைத்தியத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தூபி மிகப்பெரியது. இங்கு நின்ற அமர்ந்த நிலையில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றது.
இங்கு 39 தூண்கள் காணப்படுகின்றன. இவை எண்கோண வடிவுடையவை. நடுவில் மண்டபமும் அதோடு தூபியும் காணப்படுகின்றது. இவ்வாறே பதினான்காவது குகையும் மண்டபமும் தூண்களும் கொண்டமைந்துள்ளது. 16 வது குகை சைத்தியத்தில் விதான பகுதியும் வாயில் பகுதியும் காணப்படுகின்றது. இங்குள்ள விதான பகுதியானது மிகவும் அழகாக காணப்படுகிறது. தூண்களில் புத்தர் தொடர்பான ஜாதகக் கதைகளும் இருந்த நிலையான புத்த வடிவங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன் அஜந்தாவின் 19 வது குகை அஜந்தாவின் முக்கிய குகையாக கொள்ளப்படுகின்றது. இங்கு தூண்கள் போதிகை சிற்பப் பகுதியாகவும் கூரையைத் தாங்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது மண்டபத்தினுள் புத்தர் சிலையினை கொண்டமைந்துள்ளது. வழிபாட்டு தேவையின் பொருட்டு புத்த வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனைய குகை புத்த வடிவங்களிலும் பார்க்க இங்குள்ள புத்தர் சிலையின் உடல் கூற்றியல் வித்தியாசமானது. தாமரைத்தண்டு அமைப்பை ஒத்த தூண் அமைப்பு காணப்படுகின்றது . கல் , மரம் என்பன தூண்களின் ஊடகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகமாக கல் வேலைபாடு காணப்படுவதற்கான காரணம் நீடிப்புத் தன்மை என்பதனாலாகும். அதிகம் நிலைக்குத்துக் தனமான தூண்கள் பாவிக்கப்பட்டுள்ளன. 19ஆம் குகைவாயிலின் இரண்டு பக்கமும் சுவர் பகுதி காணப்படுகிறது.
அழகியல் நிமித்தமாகவே சுவர் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. யக்ச, யக்சி வடிவங்கள் சுவர் பகுதிகளில் கொண்டு வரப்பட்டுள்ளதைக் காணலாம். 19வது குகை அதிகம் சிக்கல் கனமானதாக கொள்ளப்படுகிறது என கூறப்படுகிறது. காரணம் இங்கு கட்டடம், சிற்பம், ஓவியம் போன்ற கூறுகள் காணப்படுகின்றமையாகும். கலைஞரின் கைவினைத் திறனை இங்குள்ள மூன்று கலைகளிலும் காணலாம். பத்தொன்பதாவது குகையின் கூரை முழுவதும் ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலைப்பாடுடைய ஒரு குகையாக இக்குகை காணப்படுகின்றது. ஏனெய சைத்தியங்களை விட பெரிதாயும் அலங்காரம் மிக்கதாயும் ஒரு சிற்பத்தனம் மிக்கதாகவும் இது காணப்படுகின்றது.
மேலும் 20 வது குகையில் அத்திவாரம் மட்டுமே இன்று எஞ்சியுள்ளது.. அத்திவாரத்தை வைத்துக்கொண்டே அதை ஓர் சைத்தியமாக இனங் காணப்படுகிறது. பிற்பட்ட கால கோயில் கட்டுமான அடித்தளமாக இவ் அடித்தளத்தை கொள்ளலாம். சைத்தியத்தின் ஜன்னல்களின் உச்சிப்பகுதியில் கொடி அலங்காரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருபதாவது குகைக்குள் போவதற்கு 3 வாயில் இருந்ததாயும் நடுவில் பெரிய வாயில் மற்றும் இரண்டு சிறிய வாயில்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருபதாவது குகை பாஜா , லோமரிசி, கார்லி என்பவற்றுடன் ஒப்பிடும்போது ஓர் வளர்ச்சியடைந்த சைத்தியமாக காணப்படுகிறது.
அடுத்ததாக பௌத்த சைத்திய கட்டடங்களில் எல்லோரா குகை சைத்தியங்கள் தொடர்பாக நோக்கினால்,
எலலோரா சைத்தியம்
இது வித்யாசமான சைத்தியமாக காணப்படுகின்றது. அதிக சிற்ப வரிசைகள் காணப்படுகின்றன. பல குகைகளுடன் கூடியகட்டடத் தொகுதியாக காணப்படுகின்றது. எல்லோராவின் பத்தாவது குகையும் சைத்தியம் எனப்படுகின்றது. இது விஸ்வகர்மா குகை என அழைக்கப்படுகின்றது.
இது விஸ்வகர்மா என்றதேவலோகச்சிற்பியின் பெயரால்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குகை புத்த சைத்தியங்கள் அந்தக் காலங்களில் எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விஸ்வகர்மாவை தேவதைகளின், அல்லது கடவுளரின் சிற்பி என்றே சொல்கின்றனர், என்பதில் இருந்து கலாசாரம் அன்றே எவ்வாறு இருந்திருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகப் பெரிய கூடத்தின் மூன்று பக்கங்களும், மிருகங்களின் சிற்பங்களால் ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரத்தின் மேலேயே எழும்பி உள்ளது. மிருகவேட்டை ஆடுவோரின் தோற்றங்கள் உள்ள ஓவியம் மேலே காணப்படுகின்றது. ஒரு பெரிய ஸ்தூபம் பக்கத்துச் சுவரின் நடுவே காணப்படுகின்றது. அழகிய புத்தரின் சிற்பமும் அதில் உள்ளது. வெராந்தா என்று சொல்லப் படும் இடத்தில் இருந்து படிகள் மேலே செல்கின்றன. மேலேயும் அழகான ஒரு சைத்தியம் காண்கின்றோம். போதி சத்துவர்களும், தெய்வ உருவங்களும் பெண் உதவியாளர்களும் காண்கின்றோம். .
பத்தாம் எண்ணுள்ள குகை சந்திரசாலா என அழைக்கப்படுகிறது. இது விஸ்வகர்மா குகை என்றும்
சொல்லப்படுகிறது. பல மாடிக்கட்டிடங்கள் போல நடுவே பிரார்த்தனைக் கூடமும் அதன் நடுவே ஸ்தூபமும் கொண்டவை. கூடத்தைச்சுற்றி இரண்டு அடுக்குகளாக வராந்தாக்களும் அவற்றில் இருந்து துறவியர் தங்கும் அறைகளும் உள்ளன. (அருகர்களின் பாதை 12 எல்லோரா ) என கூறப்படுகிறது .
கி.பி 7, 8 ம் நூற்றாண்டுக்குரியதாக கூறப்படுகின்றன. 10 வது குகையின் ஜன்னல்கள் வித்தியாசமானவை. ஔியை ஊடுருவும் பகுதியாக ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஔியானது உட்கசிய துளைகள் காணப்படுகின்றன.
அஜந்தாவுடன் ஒப்பிடும் போது தூண்கள் குறைவு. எளிமையான தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வழிபடுவதற்கான தூபி கொண்டுவரப்பட்டுள்ளது. தூபிககு முன்னால் புத்தர் சிலையும் புத்தரைச் சூழ பறக்கும் கந்தர்வர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புத்தரின் இருபுறமும் இரண்டு பணியாட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எல்லோரா கூரையமைப்பு “ பரல்வோல்ட் “ எனப்படுகின்றது. சைத்தியத்தோடு இணைநததாக விகாரை அமைப்பு காணப்படுகிறது. விகாரை அமைப்பு தியானத்திற்காகவும் துறவிகள் தங்குவதற்கான இடமாகவும் காணப்படுவதால் இது ஒரு பொதுக் கட்டமாக பார்க்கப்படுகிறது. விகாரையின் நடுவில் சிறு மண்டபமும் சுற்றிவர அறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.
விகாரைக்கு அருகில் கல்வெட்டு காணப்படுகின்றது. அதில் விகாரை தொடர்பான குறிப்புக்களும், விகாரை எப்படி கட்டப்படவேண்டும் என்பதற்கான பொது இலக்கணமும் குறிப்பிடப் பட்டுள்ளன. விகாரையின் நடு மண்டபம்பிக்குகள் கல்வி கற்பதற்கான இடமாக காணப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான நடு மண்டபமும் காணப்படுகின்றது. இங்கு 8 தூண்கள் காணப்படுகின்றன.அடித்தளம், தண்டுப்பகுயை மாத்திரம் கொண்டமைந்துள்ளது. அபாக்கஸ் பகுதிக்கு மேலேஎவ்வித சிற்பங்களும் கொண்டுவரப்படவில்லை.
அஜந்தா குகை தூண்கள் சுவரோடு ஒட்டிய அதாவது குருட்டுத் தூண்களாக காணப்படுகின்றன. ஆனால் இங்குள்ள தூண் அமைப்பானது தனியான தூண்களாக காணப்படுகின்றன.
அந்தவகையில் எல்லோரா குகைகளில் பௌத்த சமயத்திற்கு விஸ்வகர்மா குகை முக்கியம் பெறுகிறது.
இதனடிப்படையில் சமயம் சார்ந்த கட்டடங்களில் ஒன்றான சைத்தியங்கள் அமைக்கும் முறையானது அசோகன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் பௌத்தசைத்தியங்களை தொடர்ந்து, பல்லவர் காலத்திலும் சைத்தியங்கள் அமைக்கும் முறை காணப்பட்டது. லோமரிசி, கோபி, கார்லி , பாஜா , அஜந்தா , எல்லோரா போன்ற குடைவரகளூடாக வளர்ச்சிக்கட்டத்தை அடைந்துள்ளதைக்காணலாம். இவற்றின் வளர்ச்சிக்கட்டமானது
லோமரிசியுடன் ஒப்பிடுகையில் கார்லி சைத்தியமானது வளர்ச்சியடைந்ததாகவும் பாஜா, கார்லி, லோமரிசி என்பவற்றுடன் ஒப்பிடும் போது அஜந்தா குகையானது வளர்ச்சி அடைந்ததாகவும் ( அதாவது அஜந்தாவின் 20 வது குகை ) உள்ளதைக் காணலாம். இவ்வாறு பௌத்த சைத்தியங்களின் வளர்ச்சிக்கட்டம் அமையும்போது இவற்றிலிருந்து நன்கு வளர்சியடைந்ததும் வித்தியாசமானதாகவும் எல்லோரா சைத்தியங்கள் அமைகின்றன. அதாவது சிற்ப வடிவங்கள், யன்னல் , கூரை அமைப்பு முறைகள், அறைகள் அமைக்கப்பட்டுள்ள விதம், என்பன முக்கியம் பெறுகின்றன.
அஜந்தா முற்றிலும் பௌத்த சைத்தியங்களை கொண்டமைந்த குகையாக காணப்பட எல்லோரா குகையானது பொளத்த சைத்தியங்களுடள் இந்து மதம் சார்ந்த ( கைலாசநாத குகை, தசாவதாரக்குகை ) குகைளும் , ஜைன மதம் சார்ந்த ( இந்திரசபா ) குகைகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேற்குஸ்ரீப்பிட்ட விடையங்களை ஒப்பிட்டு நோக்கும்போது பௌத்த சைத்யியஙகளின் வழர்ச்சியினை அறியமுடிகின்றது.
உசாத்துனை
• இந்தியக்கலை- A.s சற்குணராஜா
• கலைக்கேசரி (volume 08)
• இந்துநாகரீகத்தில் கலை- கலாநிதி காரை. செ.சுந்தரம்பிள்ளை.
• கலைக்கழஞ்சியம் .
• வாழ்வியல் கழஞ்சியம்.
Soccer predictions for today - Football News happyluke happyluke 12bet 12bet 8086Live Soccer Results Predictions Today | Shootercasino
ReplyDeleteCasino Review - Dr.MCD
ReplyDeleteDetailed 목포 출장안마 Casino 아산 출장안마 Review 공주 출장마사지 - Mr. 경주 출장샵 Gamble.com 거제 출장마사지
How do I make money from playing games and earning
ReplyDeleteThese are the three most 출장안마 popular forms of gambling, หาเงินออนไลน์ and are explained in a very ventureberg.com/ concise and concise manner. kadangpintar The most common goyangfc forms of gambling are: