இந்திய சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சி தோரண வாயிலில் உள்ள சிற்பங்களின் எடுத் துரைப்பு.
இந்திய சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சி தோரண வாயிலில் உள்ள சிற்பங்களின் எடுத் துரைப்பு
தென்கிழக்காசியாவின் வல்லரசாகவும் உண்ணதமான கலைகளின் பிறப்பிடமாகவும் இந்தியா விளங்குகினன்றது உலக கலைவரலாற்றில் இந்தியக்கலைக்கென ஒரு தனிஇடம் உண்டு பல்வேறுபட்ட காலங்களில் பல்வேறுபட்ட வெளிப்பாடுகளுடன் கூடிய கலை தோற்றம்பெற்ற நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்திய தேசத்தில் பல்லினமக்கள் வாழ்ந்தமையினால் தத்தமது இன அடையாளங்களை நிலைநிறுத்தி ஆடசியமைத்தனர்.இதன் அடிப்படையில் இந்தியக்கலைவராறு பல்வேறு காலகட்டங்களாக பிரித்தறியப்படுகினன்றது. அந்தவகயில்
இந்திய சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சி தோரணவாயிலில் உள்ள சிற்பங்களின் எடுத்துரைப்பு என்று நோக்குகையில் சாஞ்சி தூபியும் அதனுடய காலப்பகுதியான மௌரியர்கலாமும் முக்கியம்பெறுவதோடு மௌரியர்காலத்தில் பெரும்பாலான கலைகளை தோற்றுவித்த உண்ணதமான ஆட்சியாளனான அசோகச்சக்கரவர்த்தியும் முக்கியம் பெறுகின்றான்.அந்தவகையில்.
மொரியர்காலம்
வட இந்திய வரலாற்றில் மொரியர் ஆட்சி முக்கியமானது ஒரு பெரிய பேரரசசாக மௌரிய பேரரசு தோற்றம்பெற்றது ஒருவகையில் பிரித்தாணிய அரசின்கீழ் செயற்ப்பட்டுவந்த ஒர் பெரிய அரசாக மௌரிய பேரேரசை அடயாளம் கண்டுகொள்ளமுடியும் இவ் மௌரியப்பேரரசு தத்துவங்களிலும் அதிகாரங்களிலும் முக்கிய வளர்ச்சிபெற்றதுடன் மரபுகள்சார்ந்தும் வளர்ச்சசிகண்ட ஒரு அரசாக விளங்கியது. ஒருபுறத்தில் விவசாயம் வாணிபம் அதோடுசேர்ந்த அபிவிருத்திகள் ஏற்ப்பட மறுபுறம் கட்டடம் சிற்ப்பம் என கலைகள் சார்ந்தவளர்ச்சி என்பது இடம்பெற்றது.
மௌரியர்காலம் பௌத்த செல்வாக்குமிக்க ஒருகாலமாக அடையாளம் காணப்படுகின்றது பௌத்த தத்துவங்களையும் சமயம்சார்ந்த கருத்துக்களையும் கட்டிடங்களிலும் சிற்பங்களிலும் வெளிக்காட்டினார்கள்.
மௌரிய அரசபரம்பரையின் ஆரம்ப ஆட்சியாளன் சந்திரகுப்த மொரியன் ஆவான் (கி.மு 324-300) இவரின் ஆடசிக்அகாலத்தில் இந்தியாவின் வடமேற்க்குபிரதேசத்தை வெளிநாட்டவரின் ஆதிக்கத்திலிருந்து மீட்ப்பதற்க்கு முன்வந்து இதற்க்கான போரில் வெற்றியும் கண்டான் மேற்க்கு பாரசீகம் வடக்கில் இமாலையம் வரையிலும் தெற்க்கே கிருஸ்ன, துங்கபத்திரா, ஆகிய பிரதேசங்கள் வரையிலும் மௌரியப்பேரரசு பரவியிருந்தமையினை கல்வெட்டுக்கள்மூலம் அறியக்கூடியதாக உள்ளது .
இவ்வாறு இந்தியக்கலை வரலாற்றில் மௌரியர்காலம் எழுச்சிபெற ஆரம்பித்தது சந்திரகுப்தனின்பின் அவனது மகன் பிந்துசாரன் கி.மு (300-273) வரை அரசனானான் தனது தந்தையின் காலத்தில் உருவாக்கப்பட்ட மௌரியப்பேரரசை நிலைநிறுத்திச்சென்றான் இவரின் ஆட்சியின்பின் அவனது மகன் அசோகன் (கி.மு273-236)வரை மௌரியப்பேரசை ஆண்டான் அசோகனைப்பற்றி அறிவதற்க்கு பௌத்த ஜயன சூத்திரங்கள் , கல்வெட்டுக்கள் முக்கியம்பெறுகின்றன 13ம் நூற்றாண்டில் இடம்பெற்ற கலிங்க யுத்தம் மௌரியர்காலத்தில் பெரும்மாற்றத்தை ஏற்ப்படுத்தியது .இந்தவகையில் மொரியகாலம் இந்திய கலைவரலாற்றில் முக்கியம்பெறுகின்றது.
அதனடிப்படையில் மௌரியன்காலத்தில் இந்து பௌத்த ஜயன மதங்கள் இருந்ததுடன் சமைய பொறைக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சமையம் பரப்பப்ட்டது .
இக்காலத்தில் பெளத் சமயம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்பட்ட காலமாகும் இக்காலத்தில் பௌத்தத்தில் தேரவாதம் , மகாயானம் என பிளவுகள் தோன்றியிருக்கவில்லை புத்தரின் போதனைகளைப் பின்பற்றும் மக்கள் புத்தர் பிறந்த இ டம் , ஞானம் பெற்ற இடம் , ஞானம் பெறுவதற்காகத் தியானத்தில் இருந்த அரசமரம் , தர்மப்போதனையைப் பிரதிபலிக்கும் தர்மச்சக்கரம் , புத்தரின் காலடி , அவர் பரிநிர்வாணம் அடைந்த இடம் போன்றவற்றைத் தூய இடங்களாகவும் , புனிதப் பொருட்களாகவும் கருதிவழிபட்டனர் .
இதன்பின்னர் அரசர்களும் மக்களும் இவற்றைச் சிற்பங்களாக வடிக்க முற்பட்டபோது பெளத்தசிற்பக்கலையானது தோற்றமெடுத்தது . இக்காலத்தில் அரச மதமாக பௌத்தம் காணப்பட்டதால் . அரசரின் பெரும் ஆதரவின் காரணமாக சமயச் சின்னங்கள் மிகவும் கலைத்திறனுடன் படைக்கப்பட்டன .
இவ்வாறு வளர்ச்சிபெற்ற மௌரியப் பேரேரசு சிறந்த கலைநயம் பெற்ற ஆட்சிப்பீடமாகஇருந்தது மௌரிய மன்னனின் ஆதரவு மேல்நாட்டு செல்வாக்கு பொருளாதார நிலைமைகள் பிற்கால கலைகளின் புத்தெளுச்சிக்கும் காரணமாகின மௌரியர்காலத்தை பொறுத்தவரையில கலைவரலாறு புகழ்மிக்க காலமாக மிளிரும்நிலையில் இக்காலம் பௌத்த கட்டடக்கலை மற்றும் அதனேணடு இனைந்த சிற்பக்கலை வரலாறாக அசோகமன்னனின் ஆட்சிக்காலம் முக்கியம் பெறுகின்றது. மௌரியர்கால கலைவரலாறு இவரின்காலத்திலிருந்துதான் ஆரம்பிக்இன்றது என்பர் அந்தவகையில்.
இந்திய வரலாற்றில் அசோகமன்னனின் காலத்தில் மூண்றாவது பௌத்தமானாடு நடந்தமை முக்கியம்பெற்றதெனலாம். மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் போன்ற உலகின் தலைசிறந்த பேரரசர்களையும் அசோகர் மிஞ்சி நின்றார். என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் அவரது கோட்பாட்டின் மையக்கருத்து மனித குலத்தின் நலனையே வலியுறுத்துவதாக அமைந்திருந்தது என்ற கருத்துக்களும் காணப்படுகின்றன.
எச்.ஜி. வெல்ஸ் என்பவரது கூற்றுப்படி "வரலாற்றின் பட்டியலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான அரசர்களில் அசோகரின் பெயர் மட்டும் தன்னந்தனி நட்சத்திரமாக ஓளிவீசுகிறது" அசோகர் தமது கோட்பாடுகளுக்கு உண்மையானவராகத் திகழ்ந்து அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகினார். அவர் கனவு காண்பவரல்ல; மாறாக ஒரு நடைமுறை மேதை. அவரது தர்மக் கொள்கை உலகம் அனைத்திற்கும் பொதுவானது. மனித குலம் அனைத்திற்கும் இன்றைக்கும் பொருந்தவல்லது. கருணைமிக்க ஆட்சிக்கும், போரில் வெற்றி பெற்ற பிறகும் போரைத் துறந்து அமைதிக்கொள்கையைக் கடைப்பிடித்தமைக்கும் அசோகர் வரலாற்றில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என கூறப்படுகின்றது
இவனை மாபெரும் கட்டட முதல்வன் எனவும் மரத்திற்குப்பதிலாக கல்லை முதன்முதல் கட்டத்திற்குப் பயன்படுத்தியவன் எனவும் கருதப்படுகின்றான் . இவனது கலைப்படைப்ளுக்களுக்கு உதாரணமாக பொத்த கட்டட வேலைப்பாடுகள் (தூபிகள் , தோரணங்கள்),கல்வெட்டுக்கள் கற்றூண்கள் ஒற்றைக்கல் கோவில்கள் , பாறைக்குடைவு, குகைக்கோவில்கள் என்பவற்றை கருதலாம்.
அசோகன் காலத்திலிருந்து 700 வருடங்களின் பின் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகன் பாகியன் பாடலிபுர அரண்மனையைப் பார்த்து அவற்றை மானிடர்கள் செய்திருக்க முடியாதென வியந்துள்ளார் . ஆனால் அவை எல்லாம் காலத்தின் கொடுமையால் அழிந்துவிட்டன . இன்று எஞ்சியிருப்பவை மிகச்சிலவே . அசோகன் கலைககு ஆற்றிய பணிகள் பலவாகும் . அசோகனின் கலைகளை பேர்ஸிபிறவுண் என்பவர். பாறைக் கல் வெட்டுக்கள் , தூபிகள் , தனிக்கல் தூண்கள் , தனிக்கல் உருவங்கள் , பாடலிபுர அரண்மனைகள் , குடைவரை மன்டயங்கள் என ஆறு வகையாக பிரிக்கின்றார்.
அந்தவகையில் அசோகனால் அமைக்கப்பட்ட தூபிகளும் அதனோடு இனைந்த சிற்பங்களும் முக்கியம்பெறுகின்றன பண்டைக்காலத்தில் தூபி அல்லது தாக்பா என்பது இறந்த ஒரு தலைவனின் சாம்பல் மேல் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமாகும்
பெளத்த சமயத்திற்குப் பேராதரவு தந்த அசோகர் ( கி . மு . 273 - 232 ) இந்தியாவின் பல பாகங் களிலும் புத்தரின் நினைவுச் சின்னமாகத் தூபிகளைக் கட்டினார் .
புத்தர் பரிநிர்வாணமடைந்த பிறகு அவரின் நினைவுச் சின்னங்களாக கட்டங்களும் தூபிகளும் அதனோடு இனைந்ததாக சிற்பங்களும் செதுக்கபபட்டன. புத்தர் இறந்து 300 வருடங்களின் பின்னர் ஆட்சியைப்பெற்ற அசோகன் புத்தரது நினைவுச்சின்மாக நாடெங்கும் 84000 தூபிகளை கட்டினான் என THE STORY OF STHUPA என்ற நூல் கூறுகின்றது.
கலிங்கப் போரின் பின்னர் புத்தமதத்தைத் தழுவிய அசோகன் புத்தரைப் போற்றும் முகமாக புத்தரது சாம்பற்க்கூறுகள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவற்றை அகழ்ந்தெடுத்து பல கூறுகளாக பிரித்து இந்தியா முழுவதும் தூபிகளை அமைத்தான் . இவை பௌத்த கலையின் ஒப்பற்ற சின்னங்களாக மிளிர்ந்தன . இவற்றுள் பல இன்னும் அழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது
அதில் சாஞ்சி தூபியும் சாஞ்சி தோரணமும் முக்கியம் பெறுகின்றது
கி.மு. 300. அதாவது, இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு சாஞ்சி என்னும் இடத்தில். அமைக்கப்பட்டது.
சாஞ்சி இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசாஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்தநினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.[1] இங்கு பெளத்தக்லையின் ஒப்பற்ற சின்னங்கள் பல . இன்னும் இன்றும் அழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது அதில் ஒன்றுதான் இந்த சாஞ்சிதூபி .ஒருவகையில்
இந்தியாவில் இப்போது உள்ள மிகப் பழமையான கல் கட்டுமானம் இதுதான்.என கருதப்படுகின்றது இங்கே புத்தருடைய எலும்புகள் வைக்கப்பட்டு உள்ளன.
இது பௌத்த மதத்தினரின் வழிபாட்டுக்கு உரிய இடமாகத் திகழ்கின்றது தூபியானது அசோகனால் ஆரம்பய்தில் செங்கற்களைக் கொண்டு கட்டிய இத்தூபி பின்பு ஆந்திரர்களினால்,பெருப்பிக்கப்பட்டடும் புதுப்பிக்கப்பட்டும் இன்று காணபடும் நிலைக்கு கொம்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது இது நீள்சதுரவடிவமான , உயரமான மேடையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது . முதலில் மரத்தால் அமைக்கப்பட்டு அதன் பின்னர் அதே போன்று கல்லால் அமைக்கப்பட்டிருக்க லாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர் . இத்தூபியானது 54 அடி உயரமும் 120 அடி விட்டமும் கொண்டதாகும்
தூபியைச் சுற்றி கல்வேலியானது அமைக்கப்படடுளளது தூபியில் ஹதரம் கொட்டுவவில் உள்ள கம்பம் குடையினால் அலங்கரிகப்பட்டுள்ளது கல்வேலியில் செதுக்கல் வேலப்பாடுகள் எதுவும் காணப்படவில் . நான்கு பக்கங்களும் வாசல்களும் வாசலில் வாயில் தோரணங்களும் உளளன
இந்திய சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சியின் சிற்பங்கள் தனித்ததொரு இடத்தைப் பெறுகின்றன . எனவே இக்கலை மரபு சாஞ்சிக் கலைமரபு என்று அறிஞர்களால் போற்றப் படுகின்றது
சாஞ்சியின் தோரணவாயிலில் செதுக்கல்கள் மொரியர்காலத்து சிற்பக்கலையின் தனித்துவத்தை காட்டுவதோடு பௌlத்த சம்மந்தமான சிறந்த செதுக்கல் வேலைபாடுகளையும் கொண்டுளமையினால் இந்திய சிற்ப்க்கலை வரலாற்றில் சாஞ்சி தோரணவாயில் சிற்பங்களின் எடுத்துரைப்பு என்பது முக்கியம் பெறுகின்றது .
நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன் றாக நான்கு அழகிய தோரண வாயில்களை அமைத்து , புகழ்மிக்க கலைப்படைப்பாக தூபி அமைக்கப்ளட்டுளுளது .
குறுக்குத்தூண்களை தாங்கும் விதமாக போதிகை அமைப்பதற்குப் பதிலாக அழகிய பெண்ணுருவங்களை . . செதுக்கியுள்ளனர் இச்சுருள்களிலும் கலை அம்சம் மிக்க வரலாறும சாதகக்கதை நிகழ்ச்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன புத்தரின் வாழ்ககை வரலாறுகளும் சாதகக்கதை நிகழ்ச்சிகளும்பொத்தன்களது புணித சின்னங்கள் பலவும குறிப்பாக (அசோக மரங்களும் , தர்ம சக்கரங்களும் ) ( மிகவும் , அழகாகவும் தந்த வேலைப்பாடுகளை போன்று செதுக்கப்பட்டுளன .இவை அக்காலச் சிற்பக்கலையின் உயர்ந்த நிலையைக் காட்டுகின்றது எனவே உலகக் கலை வல்லூணர்களின்கவனத்தை ஈர்த்துள்ளன . தெற்குத் தோரணைவாயிலிலுள்ள கல்வெட்டில் இவற்றை உருவாக்கியவர்கள் விதேச ( பெசுநகர் ) நாட்டைச் சார்ந்த தந்தச் சிற்பிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது ,
தோரணவாயில்கள் 34 அடி உயரமும் 20 அடி அ அகலத்தையும் உடையன . வாசலின் இருபுறமும் இரண்டு கம்பங்கள் நாட்டப்பட்டு அதன் மேலாக 15 அடி உயரத்திலிருந்து மூன்று குறுக்குச் சட்டங்கள் இடைவெளி விட்டு இணைக்கப்பட்டுள்ளன . கம்பங்கள் இரண்டு அடி அகலமானவை .குறுக்குச் சட்டங்களின் முடிவில் சுருள் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது இது மொரியர்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது .
நாண்கு வாயிலகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாயில் தோரணங்களிலும் அதிகளவான செதுக்கல் கொண்டுவரப்பட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளது இந்த சிற்பங்கள் புததரின் யாதக்கதைகளை கூறுவதையும் அத்தோடு பௌத்தமதம் சார்ந்த கருததுக்களை காண்பில்படுத்தியள்ளதனையும் காணக்கூடியதாக உள்ளது ஒருவகையில் காண்பியங்களுடாக பொத்த கருத்தாடல்களை வானிளங்கிக்கொள்வதற்க்கான வாய்புபை தந்தததாகவும் இந்த சாஞ்சி தூபி தோரணவாயில் செதுக்கல்கள் காணப்படுகின்றன
ஒருவகையில் சாஞ்சிதோரணவாயில் செதுக்கல்க்ள அக்காலத்து மொழி கருத்தாடல்கள் நாட்டின்உடைய பண்பாட்டு பழக்கவழக்கங்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது இச்செதுக்கல்க்ள் மெல்லிய புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்படடுள்ளதனை காணலாம் புத்பெருமானுடைய பிறப்பிலிருந்து இறப்புவரையான காலப்பகுதியில் அவருடைய உபதேசங்கள் உட்பட அனைத்துசெயற்ப்பாடுகளையும் விபரிப்பதாகதொடர் கதையாக செதுக்கல்கள் கொண்டுவனப்பட்டுள்ளன
அதுமட்டுமில்லாம் செதுக்கல்களில் யானை உருபம் போதிசத்துவர் உருவங்கள் அழகோடு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் யக்சன் யக்சகி வடிவங்கள் பாதுகாப்பிபின்பொருடடு செதுக்கப்பட்டுள்ளத காணலாம் ஒருவகையில் இந்த யக்சகன் யக்சகி வடிவங்கள் சாஞ்சிதூபியின் பாதுகாப்பினபொருட்டும்அவர்களுடைய கால் தெய்வம் என்ற கோட்பாட்டை வலியுறுத்துவதாக கொண்டுவரப்பட்டுள்ளது .
ஒவ்வொரு வாயில்தோரங்களிலும் செதுக்கப்பட்ட கதையாடல்கள் தொடர்ச்சியான கதையாடலாக கொண்டுவப்படடுளளமையினை காணக்கூடியாக உள்ளது குத்து தூண்களின் மையப்பகுதியில் தர்மச்சக்கனம் போண்ற வடிவமைப்புக்களும் இலை கொடி அலங்காரங்களும் மனங்கள் கொடிகள் கிளைகள் போண்றனவும் கொண்டுவரப்பட்டுள்ளதனை காணமுடியும் புத்தருக்காண குறியீடாக இங்கு இருக்கின்ற சிற்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளது
தோரணத்தின் குறுக்குச்சட்டங்களிற்க்கு இடடையிலும் சிறப்மபற்றியவிபரிப்பென்றது கொண்ட்வரப்பட்டுள்ளது
சாஞ்ஞசின்உடய வாயில்தோரணம் எனறது புத்தரினுடைய வாழக்கைவரலாற்றினை தொடர்ச்சியான கதைகளூடாக விளக்குவதாகவும் அமைகின்றது. ஒருவகைமில் பொத்த யாதக்கதைகள் புத்தருடைய வாழக்கை நிகழ்வுகள் மொரியர்களுடைய வரலாற்றுச்செய்தி மிருகங்கள் குறியீடுகள் அலங்காரங்கள்போண்றன இச்சிற்பங்களில் மிகையாக கூறப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது
யாதக்கதைகளுக்கு ஜத்தந்தயாதகம் , வெசந்தரா ஜாதகம் சான ஜாதகம் சாமயாதகம் இசிமிக யாதகம் போன்ற ஜாதகக்கதைகளை உதாரணமாக குறிப்பிடலாம் புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரித்தல் என்பதன் அடிப்படையில் மாயாதேவியினுடைய கணவு ,சித்தாத்தரின் துறவு வாழ்க்கை அவர் புத்தராகும் நிலை ,புத்தர் சிம்புலாவத் நகருக்கு வருகைதரல், புத்தர் நீர்மேல் நடததல், போண்ற பல்வறு நிழ்வுகள் தொடர்கதைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதனை இங்கு காணக்கூடியதாக உள்ளது
அதுமட்டுமல்லாது சிங்கம் குதிரை நாகம் யானை மயில்போன்ற மிருகங்களும் தர்மச்சக்கரம் கொடிகள் மரங்கள் கேத்திர கணித அமைப்புக்களும் தொடர்ச்சியாக இச்செதுக்கல்களில் கொண்டுவரப்பட்டுளுளதனையும் காணக்கூடியதாக உள்ளது
சாஞ்சி தோரண சிற்பங்களின் பண்புகள் என்று பார்த்தால்அவை ஒருவகையில்
பௌத்தம்சம்மந்மான கதைகளையும வரலாற்று சின்னங்களையும் சமய குறியீடுகளையும் பிரதிசெய்யும் ஒரு ஊடகமாக கொண்டுவரப்பட்டுள்ளது பொதுவாக நாண்கு வாயில்தோரணங்களிலும் தூபி அரசமரம் தீவக விருடசகம் மாறனினு யுத்தம் பத்தரின் பிற்ப்பு வாமண உருவங்கள் என்பன தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் இத்தோரணத்தை குள்ள உருவங்களும் விலங்குகளும் தாங்கிநிற்பதுபோண்ற வடிவமைப்பு என்பதூ கொண்டுவரப்படடுளுளதை காணமுடியும்
ஒண்றன்மேல் ஒண்றாக அடுக்கப்பட்ட கற்தூண்கள் என்றது கொடி அலங்காரங்களின்மூலம் இனைப்புப்பெறுவதையும் காணக்கூடியதாக இருக்கு ஒவ்வொரு இடைவெளிகளிலும் குதிரை குதிரைவீரர்கள் யக்சகி சக்சகர் வடிவங்கள் போண்றன செயுக்கப்படடுளுளதையும காணலாம் அதுமட்டுமல்லாது தோரணத்தின் உச்சத்தில் திரிசூலம் என்றது செதுக்கப்பட்டுள்ள அமைபபையம் காணக்கூடியதாக உள்ளது அந்தவகையில் நாண்குபக்கமும் செதுக்ப்ட்டுளுள்ள சிற்பங்களின் பிரதிபலிப்பை நோக்கலாம்
மிக நுனுக்கமாக செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பங்களில் உரவங்கள் அசைவுததன்மையோடு புடைப்பு சிளற்பங்களாக செதுக்கப்பட்டுளள்ளன அதுமட்டுமல்லாமல் ஜாதகட்கதைகள் என்பது அதிகமாக செதுக்கப்பட்டிருந்தாலும் முக்கியமான தெரிவுசெய்யப்பட்ட ஜாதக்கதைகளை கொண்டுவருதல் என்ற தன்மை இங்கு காணப்படுது ஒவ்வொரு செதுக்கல்களிற்க்கு இடையிலும் இடைவெளி என்பது இங்கு கொண்டுவரப்படவில்லை மிக நெருக்கமான முறையிலேயே சிற்பங்கள் சதுக்கபபட்டுள்ளன இடைவெளிகள் இருப்பின் அதை கொடி அலஙகாரங்களின்மூலம் நிரப்பி ஒரு தொடரச்இயான கதைப்பாங்கை கொண்டுவந்துளளனர்
புத்தருக்காண உருவம் என்றது கொண்டுவரப்படாது குறீயீடுகளின்மூலமே குறத்துக்காட்டப்படுகின்றது புதரின் அடையாளமாக வெவ்வேறுபட்ட சினன்ங்கள் கொண்டுவரப்படடுளளதையும் காணக்கூடியதாக உள்ளது
தூபியின் நான்கு வாயில்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன அந்தவகயில் தெற்க்கு வாயிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் எடுத்துரைப்புப்பற்றி நோக்கலாம்
தெற்க்குவாசல் தோரணம்
நான்கு தோரணங்களிலும் முதன்முதலில் அமைக்கப்பட்டது தெற்குத் தோரணம் என கூறப்படுகின்றது. இதுவே ஏனைய தோரணவாயில் களைவிட கலைஅம்சத்தில் சிறந்ததாகும் சாஞ்சித் தோரணத்தில் ஜாதகக் கதைகள் , புத்தரது வாழ்க்கை நிகழ்வுகள் , பழையவரலாற்றுச் செய்திகள் , விலங்குருவங்கள் குறியீடுகள் , அலங்காரங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன . ஜாதகக் கதைகளில் ஷட்தந்த ஜாதகம் , வெஸ்சந்தரஜாதகம் , , இசிமிக ஜாதகம் போன்றவை மகாகபி ஜாதகம் , சாம ஜாதகம் செதுக்கப்பட்டுக் காணப்படுகின்றன . புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளில் மாயாதேவியின் முற்றுந்துறந்து வெளியேறுதல் , புத்தராகுதல் , கிம்புல்வத்புரத்திற்கு வனுகைதரல், கருநாகத்தையடக்கிய காட்சி , உருவேலாவனத்தில் வருகை , காசியப்பருக்குப் போதித்தல் , புத்தர் நீர்மேல் தன்மாணாக்கரான நடத்தல் , பிம்பிசாரன் இருகுதிரைகள் பூட்டிய தேரில் இராஜகிருய அரண்மனை வாசலில் வந்திறங்கும் காட்சி போன்றவையும் , வரலாற்றுச் செய்திகளாக புனித சின்னங்களுக்கான கலகம் அசோகன் போதிமரத்தை வழிபடுதல் மல்ல என்னும் அரசனின் புத்திரர்கள் புனித சின்னங்களை எடுத்துச்செல்லுதல போன்றவை விலங்குரு வங்களில் சிங்கம் , குதிரை , நாகம் , மயில் , மிருகங்களும் , தர்மசக்கரக் குறியீடும் அலங்க யானை போன்றனவும் கொடிகள் , பழமரங்கள் கேத்திர கணித வடிவங்களை போன்றவும் செதுக்கப்பட்டுள்ளன.
தெற்குத் தோரணவாயில் சாத் கர்ணன் என்ற அரசனின் காலத்தில் ஆனந்த நமதி என்ற சிற்பியால் அமைக்கப் பட்டதென நடுவில் அமைக்கப்பட்ட குறுக்குச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது .
இங்கு
சங்கிஸ்தபுர ஏனிக்காட்சி என்பது செதுக்கப்பட்டள்ளது
தேவலோகத்தில் இருந்து சங்கஸபுரத்திற்குச் செல்வதற்கு தேவர்களினால் உருவாக்கப் பட்ட ஏணியில் புத்த பெருமான் இறங்கும் காட்சி காணப்படுகின்றது . புத்த பெருமான் தேவ லோகத்யில் நிற்கும் தன்மை யும் அவர் சங்கஸபுரத்திற்கு இறங்கி நிற்கும் தன்மையையும் | விளக்குவதன் பொருட்டு அரசமரம் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது –
புத்தர் புத்தநிலையை அடைதல் என்ற காடசியினையும் தெற்குவாசல் தோரணத்தில் காணமுடியும்
இங்கு இருக்கை ஒன்றும் உச்சில் அரசமரமும் காணப்படுகின்றது மாரனும் , அவனுடைய பெண்களளும் அன்மையில் வேறு யமதூதர்களும் அரச மரத்துக்கு கீழ்உள்ளார்கள்
தெற்க்குவாசல் தோரணத்தின் முன்பக்க தூணில் காணப்படுகின்ற செதுக்கல்கள்
பல பெண்களோட மாயாதேவியின் செதுக்கலகளை கொண்டுவந்து அவருடைய கதையாடலை விமர்சிப்பதாக இந்த சிற்பங்கள் கொண்டுவரபபட்டுள்ளன பலபெண்களொடு இளவரசன் ஒருவன் யானைமீது ஏறிச்செல்கின்ற காட்சி என்றது கோணடுவரப்பட்டுள்ளது ,பெரிய தூபியை வழிபடச்செல்லும் காட்சி என்பதும் செதுக்கப்பட்டுளுளது . இவற்றோடு பெரிய தலையுடன்கூடிய வாமண உருவங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதனை காணலாம் இந்த தெற்க்குதோரணத்தில் காணப்படுகின்ற பெண் உருவங்கள் தலைமுடி விரித்துவிட்ட ரிலையிலும் அவரர்களது உருவங்களில் பட்டி ஒன்று கட்டப்பட்ட நிலையிலும் பூமாலை ஒன்று அணிந்த நிலையிலும் கொண்டுவரப்படடுள்ளதை காணலாம் இவ்வாறா செயுக்கல்களை தெற்ககு தோரண முன்பக்க தூனில் காணக்கூடியதாக உள்ளது
தெற்க்குத்தோரண கிழக்குத்திசை தூணில் காணப்படும் சிற்பங்கள்
புத்தரின் தலைமுடியும் கிரீடமும் செதுக்கப்பட்டுள்ளது புதுதருடைய கிரீடத்யை வணங்குவது போன்று தவதீச விகாரையில் அப்பரசுக்கள் புத்தரை கும்பிடுவதுபோன்ற காடசி சிய்தரிக்கப்பட்டுளுளதை காணலாம் இதனைத்தொடர்ந்து வடககுவாசல் தோரண சிற்பஙகளின் விபரிப்பை நோக்கலாம்
வடக்குவாசல் தோரணம்
வடக்குவாயிற் தோரணத்தில் காணப்படும் செதுக்கல்கள்
வெஸ்ஸந்தர ஜாதகம்
வலமிருந்து இடம்நோக்கி செதுக்கப்பட்டுக் காணப்படும் வெஸ்சந்தர ஜாதகத்தில் அரசகுடும்பமொன்று தேரில் செல்லுதல் தேர் தானமாகக் கொடுக்கப்படல் , பிராமணனுக்குத் தானம் வழங்கல் , வெஸ்ஸந்தி அரசன் மீண்டும் நகரத்துக்குத் திரும்பல் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன .
வைசாலிக்கிராமத்தின் அண்மையில் குரங்கு ஒன்று பூஜை செய்யும் காட்சி ஒண்றும் செதுக்கப்பட்டுள்ளது
அரசமரத்தின் அடியில் இரண்டு குரங்குகள் காணப்படுகின்றன . இதில் ஒரு குரங்கு பூஜைப்பாத்திரத்தை ஏந்தியநிலையில் உள்ளது . ஏனைற குரங்குகள கைகள் இரண்டை யும் மேலே உயர்த்தி வணங்கு கின்றநிலையில் காணப்படுகின்றது . செதுக்கலில் வைசாலிக்கிராமத்து அரசர்கள் இருவரும் காணப்படுகின்றனர் . மற்றும் மகாகபிஜாதகம் , ஷட்தந்த ஜாதகம் , அலம்புசாஜாதகம் பழங்களைப்பிடுங்கும் பெண்ணைச்சுற்றி விலங்குகள் காணப்படுதல் மாயாதேவியின் கனவு , புத்தரின் பிறப்பு , ஏழு புத்த நிலைகள் போதிமரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் , முதலாவது தர்ம உபதேசம் , சுஜாதாவின் பாற்பிபட்டுத் தானம் இந்திரஜாலக் குகைக்கு , புத்தர் எழுந்தருளல் , மாரயுத்தம் , பௌத்தத்தின் ஆரம்பம் , சுத்தோதனன் புத்தரைச் சந்தித்தல் , புத்தரின் பரிநிர்வாணம் , அரசியின் உள்ளங்கையில் கால்வைத்துச்செல்லும் குதிரை இங்கு குதிரையில் யாரும் காணப்படவில்லை . ஆனால் அரசி சாமரை வீசுகிறாள் . எனவே குதிரைமீது உருவம் செதுக்கப்படாத புத்தரே அமர்ந்திருக்கின்றமை குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது எனக் கருதக்கூடியதாக உள்ளது . துவாரபாலகர் உருவங்கள் . சாலபஞ்சிகா என்னும் யக் ஷ உருவங்கள் மல்ல என்னும் அரசரது புத்திரர்களுக்கும் வேறு அரசர்களது புத்திரர்களுக்குமிடையில் புனித சின்னங்கள் பற்றிய கலகம் ,புத்தசேனைகளின் முற்றுகை , போர்புரியும் காட்சி . மல அரசர்களின் புத்திரர்கள் புனித சின்னங்களை எடுத்துச் புனிதசின்னங்களைவைத்துதூபி கட்டுதல் போன்றசெதுக்கல்களையும் காணலாம்.
வடக்குவாசல் தோரணத்தில் மேற்கு திசையை நோக்கிக் காணப்படும் தூண்களில் உள்ள சிற்பங்கள்
புததர் தனது தவவலிமையால் தவதீசா என்ற தேவலோகத்திற்க்கு தர்ம உபதேசம் செய்தல் என்ற காட்சி செதுக்கப்படடுள்ளது அதோடு புததர் சங்கிஸ்த்த என்னும் கிராமத்துக்கு ஏணில் இனுந்து இறங்கிவருதல் என்ற காட்சியும் தொடர்ச்சியாக செதுக்கப்பட்டுள்ளது.இந்த காட்சியின் இரு புறங்களிலும் வாத்தியக்கருவகளொடு இசை மீட்ப்பவர்களும் மறுபுறம் பிராமணர்களும் சித்தரிக்கப்ப்டுள்ளதையும் காணமுடிகின்றது அதோடு வஜிர ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ உருவங்களும் இங்கு முக்கியததுவம் பெறுகின்றது.
வடக்கு தோரணத்தின் பின்புறம் காணப்படும் சிற்பங்கள்
இந்த பகுதியில் ஜத்தந்த என்ற யாதகம் செதுக்ப்பட்டுள்ளது அதில் பறக்கும் சக்தியுள்ள என்னாயிரம் யானைகளுக்கு தலைமை தாங்குகின்ற புத்தர் என்பது காட்டப்பட்டுள்ளதுசெதுககலின் மததிய பகுதியில் புத்தர் மாறபறராயாவடிவத்தில் கொண்டுவரப்பட்டிருபபதை அவதாணிக்கக்கூடியதாக உள்ளதுஅதோடு மாறனின் யுத்தம் என்ற செதுக்கல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாறனின் யுததம் என்ற செதுக்கலில் ஒருபக்கம் மாறனின் படையும் ஒருபக்கத்தில் புத்தரை குறிப்பதற்க்காக வஜிராசன முறை என்பது கொண்டுவரப்பட்டுள்ளது வயிராசன முறையூடாக பூத்தருககுக்ஷகுறியீடாக வெள்ளரசுமரம் காட்டப்பட்டுள்ளதை காணலாம்இச்செதுக்கலின் நாண்குபுறமும் வெசந்தர ஜாதக்கதைபற்றிய சித்தரிப்புக்ள் கொண்டுவரப்பட்டுளளமையினை காணக்கூடியதாக உளுளது.
கிழக்குவாசல் தோரணம்
சாஞ்சியின் ஏனைய தோரணங்களைப்போலவே கிழக்கு வாசல் தோரணமும் சிற்பங்களால் நிறைநது காணப்படுகின்றது அந்தவகையில் கிழக்குவாசல் தோரண செதுக்கல்களின் எடுத்துரைப்பு என்று நோக்குகையில் பல செதுக்கல்கள் செதுக்அகப்பட்டுள்ளமையினை காணலாம் உதாரணமாக
அசோகன் போதிமரத்தை வணங்குதல் , மரமொன்றை முறிக்கும் அரக்கி . ஏழு புத்த நிலைகள் , தூபி , போதிமரம் போன்ற காட்சிகள் , புத்தரின் பிறப்பு , , ராமகாமசைத்தியத்தி கிசோகோதமியிடம்புத்தர்வளர்தல் பூஜை செய்தல் என்பவற்றை குறிப்பிடலாம் மேலும்
தோரணத்தின் அடியிலுள்ள குறுக்குச் சட்டத்தின் மத்தியில் தூபி ஒன்று காணப்படுகின்றது . இருபுறமும் யானைகள் நின்று வணங்குகின்றன . இரண்டாவது குறுக்குச் சட்டத்தில் நடுவில் போதி மரம் உள்ள அதன் இருபுறமும் சிங்கங்கள் , எருமைகள் , ஐந்துதலைநாகம் போன்றவை வணங்குகின்றன . மேலுள்ள மூன்றாவது குறுக்குச்சட்டத்தில் போதி மரத் காணப்படுகின்றனர் . ஒராவது குறுக்குச் வணங்கும் மாந்தர்கள் பூட்டம் தூணுடன் பொருந்தும் சதுரவடிவமான பகுதியில் ஆண் ண் உருவங்கள் கொம்புள்ள ஆட்டின்மேல் அமர்ந்துள்ளது ாலவும் , இரண்டாவது குறுக்குச்சட்டம் பொருந்தும் பகுதியில் , பெண் உருவங்கள் ஒட்டகம் போன்ற மிருகத்தில் , அமர்ந்திருத்தல் , மேற்புறம் தூபி ஒன்று காணப்படுதல் , அதைவணங்கும் மனிதர்கள் போன்றனவும் , மூன்றாவது குறுக்குச்சட்டம் பொருந்தும் பகுதியில் பறக்கும் சிங்க உருவத்தின்மீது மனித உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இல்வாழ்க்கையைத் துறத்தல் ( அபிநிஷகிரமணய )
இல்லற துறக்கின்ற காட்சியானது சாஞ்சிச் வாழிககையைத செதுக்கல்களிடையே மிகவும் முககIயமான செதுக்கலாகும் குதிரையின் மேல் செல்லும் போதிசத்துவர் இருமுறை காட்டப் படட்டுள்ளதுடன் இறுதியில் குதிரை மறுபக்கம் திரும்பியுள்ளது சித்தார்த்தர் தபசியாக மாறியுள்ளதைக் காட்டுவதன் பொருட்டுச் பாதம் செதுக்கப்பட்டுள்ளது . குதிரையின் மேல் போதிசத்து வரைக _ காடட்டாது அவர்இருப்பதுபோல் காட்ட குடை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம் .
தேவ ஆராதனை
கிழக்குப் பக்கத் தோரணத் தூணின் மேலிருந்து கீழாக முதலாவது சதுரத்தில் இக்காட்சி காணப்படுகின்றது இச் சதுரத்தின் மத்தியில் அரசமரம் புத்த பெருமானுக்குப் பதிலாகக் குறியீடாகக் காணப்படுகின்றது . அரசமரத்தைச் சுற்றித்தேவர்கள் காணப்படுகின்றனர் .
யடில தமனய ( பிராமணரது கர்வம்
பலபகுதியில பிராமணர்கள் தோணியில் செல்லும் காட்சியும் , பறவைகளும் காணப்படுகின்றன .மத்தியில் ஆசனம் உள்ளது கர்வம் இழந்த பிராமணர்கள் புத்தரை ( அரசமரம் ) வணங்குதல் போண்று செதுக்கப்பட்டுள்ளது
கிழக்கு தோரணத்தின் முண்பக்க செதுக்கல்
கிழக்குதோரணத்தின் மேற்பகுதியில்தூபி ஒண்றும் அதனோடு இனைந்து வெள்ளரசுமரம் எனறதும் கொணடுவரப்பட்டுள்ளது இநன்மூலம்இறநத புத்தரினு அடையாளமாக தூபியும் வெள்ளரசுக்கிளையும் கொண்டுவரப்பட்டுள்ளதை நாங்க பார்க்கக்கூடியதாக உள்ளது அதோடு இனைந்து அந்த வெள்ளரசுக்கிளையை வணங்குகின்ற மனிதன் தேவதை உருவங்கள் என்பன தொடர்ச்சியா செதுக்கப்பட்டுள்ளன அதுமட்டுமல்லாது செதுக்கலின் நடுப்பகுதி புத்தரை வணங்கும் காட்சி என்பதை சித்தரிக்கின்றது நடுப்பகுதியில் குறியீடாக வெள்ளரசுக்கிளையை புத்தர் சுற்றி வணங்குகின்ற காட்சி என்பதைவிட்டு கீழ்ப்பகுதியில்அசோகனை வணங்க்வதற்க்குரிய காட்சிகளும் தொடர்ச்சியாக தேவர்கள் நிற்பதுபோன்ற காட்சிகளும் கொண்டுவரபப்பட்டுள்ளது மேல்ப்பகுதியில் ஏழு வெள்ளரசுக்கிளையொடு தூபி ஒண்று கொண்டுவரப்பட்டுள்ளமையினையும் காணக்குடியதாக உள்ளது தூபியும் ஏழு வல்லரசுக்கிளையும் புத்தரின் ஏழு பிறப்புப்பற்றி குறியீட்டுத்தனமாக கொண்டுவரப்பட்டுள்ளது இசெதுக்கல் அரைவட்ட பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுளளது. அதிகமாக சாஞசி தோரணத்தில் இருக்கும் செதுக்கல்கள் குஉறியீட்டுத்தனமான செதுக்கலாகவே நாம் பார்க்கின்றோம் புத்தருக்கு குறியீடாக பல்வேறு பொருடக்களை கொண்டுவருகின்ற தன்மையினை காணக்கூடியதாக உளுளது
வழமைபோலவே இங்கும் இடைவெளிகளை நிரப்புவதற்க்காக கொடி அலங்காரங்களும்புங்கலசங்களும் தொடர்ச்இயாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
கிழக்குதோரணத்தில் வலபபகுதி தூனில் காணப்படும் செதுக்கல்கள்
இத் தூனின் செதுக்கலகளின் பிரதான மத்திய பகுதயில் பெண் உருவம் ஒன்று காணப்படுகின்றது அது அப்சரசு /பாலசஞ்சிகா போன்ற தேவதை உருவங்களை வெளிப்பணுத்துகின்ற கலையம்சம் பொருந்திய உயிரோட்டமான பெண் உருவமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது ஒருவகையில் நளினமான உடலமைப்புடன் மாங்கொப்பொண்றை கைகளை பிடித்தவாறு காணப்படும் காட்சி என்பது கொண்டுவரப்பட்டுள்ளமையினை காணலாம் தலைமுடி அவிள்க்கப்பட்டு உச்சிப்பகுதிமட்டும் முடியப்பட்டநலை என்பது இந்த பெண் உருவத்தில் கொண்டுவரப்பட்டிருக்கு ஆடைள் எனறது உடலோடு ஒட்டியவாறு அங்க நெளிவுகளை வெளித்தெரியமாறு கொண்டுவரப்பட்டுள்ளமையினையும் அதன் நுணுக்கம் என்பது மிகுந்த திறன்வாய்ந்த செதுக்கல்க்ஷநுட்பமாக கொண்டுவரப்பட்டுள்ளமையினை காணலாம். தொடரச்இயாக களுதது இடை என்றவாறு உடல் அங்கங்களில் அதிகமான ஆபரணங்களை அனிந்தவாறாக குறித்த சிற்பம் கொண்டுவர்ப்பட்டுள்ளது .தூண்களினு இரண்டுபக்கங்களிலும் மேல் யூண்களை தாங்கியவாறான அமைப்பில் குறித்த பென்சிற்பம் கொண்டுவரப்பட்டுள்ளது
கிழக்குத்தோரணத்தின் பின்பகுதியில் காணப்படும் செதுக்கல்கள்
இங்கும் ஒரு பெண்னுருவத்தினு செதுக்கல்தானு செதுக்கப்படடுள்ளது இந்தப்பெண்னும் விரிந்த தலை முடி அமைப்புடன் அடல் நளினம்கொண்டதாகசெதுக்கப்பட்டுள்ளது . முன்னை யமான அசைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆடை ஆபரணங்களுடன் அழகு பொருந்திய வகையில் இந்த சிறப்ம கொண்டுவரப்பட்டுள்ளமையினை காணலாம்.
ஒருவகையில் இந்த பகுதியில் காணபாபர்ற சிற்பம் என்றது கழக்குதோரணத்தின் முற்பகுதியில் ஒரங்களில் காணப்படுகின்றசிற்பங்களை ஒத்ததாகவே காணப்படுகின்றன அனால் இது சாலபஞ்சிகா என்ற வரையறைக்குள் காணப்படுது ஒருவகையில் உடலோடு ஒட்டிய ஆடையடன் அலங்காரம்மிகுந்த பெண்னாக தலைமுடியைவிரித்துவிட்ட நிலையில் காணப்படுகின்ற செதுக்கலாகத்தான் இந்த செதுக்கல் காணப்படுகின்றன.
மேற்க்குவாசல் தோரணம்
மேற்க்குப்புற தோரணவாயில் முன்பகுதி செதுக்கல்கள்
புத்தரின் தந்ததாதுவை எடுத்துச்செல்லும் பெரகெரா காட்சி
தந்ததாது என்பது புத்தருக்குரிய குறியீடாக கொண்டுவனப்பட்டுள்ளதுடன் அரசசமர இலை தொடர்ச்சியாக கொண்டவரப்படடுளுளது அவற்றை வளிபடுவதுபோல் மனித தேவ உருவங்கள் மேற்க்குதோணபகுதில் செதுக்கப்பட்டுள்ளது
மேற்க்குவாசல் தோரணத்தில் வெடன் யுத்தக்காட்சி (மாரபராஜ யுத்யம் போண்றவையும் , பிஜஜாதகம் மற்றும் ,இசிமிக ஜாதகம் ,புல்வத்த புரத்துக்கு எழுநதனுளல் போண்றவை செதுக்கப்பட்டள்ளன
மாரபராஜ
மேற்க்ககு புற தோரணத்தில் காணப்படும் இடை குறுக்குச்சட்பத்தில் இக்காட்சி காணப்படுகின்றது இதன் மத்தியபகுதியில் புத்தர் நிலையினை குறிக்கும் அரசமரம் காணப்படுகின்றது தோற்கடிக்கப்பட்ட ஜம தூதர்கள் ஒடுவதுடன் ஒடும்போது நிலத்தில் விளுந்த ஜம தூதுவன் ஒருவனுக்கு இன்னொரு ஜமதூதுவன் கூரிய ஆயுதத்தால் குத்துவதுபோண்று காட்சி காட்டப்பட்டுள்ளது..
மேலும்
மகாகபியாதகம் இசுமிக ஜாதகம் தன்மபோதனையின் ஆரம்பம் பரிரிர்வாணமடையும் காட்சி என்பனவும் செயுக்கப்பட்டுள்ளன
மேற்க்குப்புற தோரணத்தில் முன்பகுதியில் காணப்படும் செதுக்கல்கள்
மேற்க்குப்புறய்தோரணத்தின் முண்பகுதியில் வடக்குப்புறமாக உள்ள தூணில் குறுகிய கைகளுடனும் பெரிய வயிற்றுப்பகுதியுடனும் வாமண உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக சாஞ்சி தோரணவாயில் செதுக்கல்களின் எடுத்துரைப்பு என்று நோக்குகையில் சாஞ்சி தோரணவாயில் சிற்பங்கள் தமக்காண கலைமரபுகளுடன் தனித்தன்மை கொண்டதாக செதுக்கியுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது தமக்காண சில பொது பண்புகளையும் தன்னகத்தே கொண்டதாகவே சிற்பங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில்தவகயில்
புத்தரின்வாட்க்கைவரலாறுகள் அதிகமாக செதுக்கப்ளட்டுள்ளமைறினை கானலாம்காணக்கூடியதாக உள்ளது அத்தோடு பௌத்த யாதகக்கதைகள் முக்கியம்பெறுகின்றன உயானணளாக வசந்தரயாதக்கதை, மகாவலி. யாதக்கதை சத்தந்தயாதக்கதை என்பவற்றை குறிப்பிடலாமம்.
புத்தருக்கு குறியீட்டுரீதியான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியான கதைகூறல் பண்பு என்பது சிற்பங்களில் கொண்டுவரப்பட்டுளது அத்தயோடு செதுக்கல்களில் காணப்படும் மனித் உருவங்களும் விலங்குருவங்களும் உணர்ச்சிதளும்பும் வகையில் செதுக்கப்பட்டுளளன.
உயிரோட்டமாகவும் கொணடுவரப்பட்டுள்ளன.
சிற்பங்களுக்கிடயிலான இடைவெளி என்பது மிகவவும் குறைவாக நெருக்கமான தன்மையில் செதுக்கப்பட்டுளுளதை காணக்கூபியதாக உள்ளது மேற்குப்புறத்தை நோக்கிய தூண்களில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்க்கு புங்கலச அலங்காரங்கள் செதுக்கப்பட்டுள்ளன புங்கலசங்களின் இடைவெளிகளை நிரப்புவதற்க்கு கொடி அலஙகாரங்கள் ஒண்றோடு ஒன்று பினைந்தவாறு செதுக்ப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது பெரும்பாலும் கொடி அலங்காரங்கள்தூனின் ஒரங்களை நோக்கி பயனிப்பதாக கொண்டுவரப்பட்டுளளன
தோனணத்திலன் மூண்று குறுக்குத்தூண்களையம் ஐக்சகி என்ற பெண்வபிவசிற்பம் தாங்கியவாறாக காட்டப்பட்டுள்ளது இ
இவர்களது காண்பியல் கூறுகள் எவ்வாறானது அவை எவ்வாறான தன்மையில் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை சிற்பங்களில் கொண்டுவரப்பட்ட ஆடை அமைப்புக்களில் வலுப்பெற்றிருப்பதை காணமுடிகின்றது ஆடை அமைப்பு என்று நோக்குகையில் இங்கு உடலோடு ஒட்டிய ஆடை அமைப்பு கொண்டுவரப்படுகின்றது அதுமட்டுமல்லாது தோனணததில் செதுக்கப்பட்டுள்ள கதைகளில் தொடர்ச்சி என்பதும் தொடர்ச்சியான கதை கூறல் என்பதும் கொண்டுவரப்பட்டுள்ளது
தோரணவாயில் செதுக்கல்களின் சிறப்பியல்புகள என்று நோக்குகையில் மிகநுட்பமான முறையில் உருவங்கள் செதுக்கப்படடுள்ளன அத்தோடுகதையின் முக்கிய பகுதிகளே செதுக்கல்களக கொண்டுவரப்பட்டுளுளது ஜீவனை விருட்ஷ அலங்காரம் . போதிமரம் , தூபி . புத்தரின் பிறப்பு . மாயுதம் பகிரவஉருவங்கள் போன்றவை எல்லாத் தோரணங் பகிரவ களிலும் சதுக்கப்பட்டிருத்தல் . போன்றவற்றைக் குறிப்பிடலாம்
தோரணவாயில் செதுக்கல்களின் சிறப்பியல்புகளை
மிகநுட்பமான முறையில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளமை கதையின் முக்கிய பகுதிகளே செதுக்கப்பட்டுக் காணப் படுகின்றது ஜீவனவிருட்ஷ அலங்காரம் , போதிமரம் , தூபி , புத்தரின் பிறப்பு மாரயுத்தம் பகிரவ உருவங்கள் போன்றவை எல்லாத் தோரணங் களிலும் செதுக்கப்பட்டிருக்கினன்றன ,
மேற்குறிப்பிட்ட வகையில் சாஞ்சிதோரண வாயில் செதுக்கல்களின் எடுத்துரைப்பு காணப்படுகின்றது. அந்தவகயில் இந்திய சிற்பக்கலைவரலாற்றில் சாஞ்சி தோரணவாயில் செதுக்கல்கள் முக்கியம் பெறுகின்றது என்பதனையும சிற்பங்களனு எடுததுரைப்புக்களையும் அறயமுடிகின்றது
உசாத்துனை
•The art of india -sivaramamurti house bombay.197
•இந்துநாகரீகத்தில் நுன்கலை
- S.சோதிலிங்கம்
-இந்தியக்கலை வரலாறு
--சற்குணராசா
அசோகர்
m.s கோவின்தசாமி
-இந்திய படைப்பு
-கஜேந்யிரன்
-தென்னிந்திய சிற்பவடிவங்கள்-
-க.நவரத்தினம்
-SANCHI ARCHACOLGICGL SURREYOF
-NNDIA NEW DELHI
-
-கலைச்செல்வங்கள்
M.piratheep
..... Uoj....
Comments
Post a Comment